நிரந்தரக் குடியேற்றம்
கெஞ்சலில் தொடங்கி… மிஞ்சலில் நிறைந்து…
கொஞ்சலில் கனிந்து… ஊடலில் உறைந்து…
கூடலில் கலந்து நதியாய்ப் பாய்ந்து,
நெஞ்சம் எனும் ஆழிகளில் நித்தம் கலக்கும் காதல்!
அது நெஞ்சக்கடலைத் தாண்டியும் சென்று
தஞ்சம் புகுந்திடும் உயிரின் பந்தம்!
தற்காலிகத் தங்கும் இடம் அல்ல அது – ஓர்
நிரந்தரக் குடியேற்றம்!
அன்பும் அதிகாரமும் சரிபாதி கலந்த
‘மனைவி’ எனும் அழகிய உறவு அது…
காலங்கள் கடந்து கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும்,
காதல் கொண்ட அவன் நெஞ்சில் சுருக்கங்கள் விழுவதில்லை!
அவளோ… அன்பின் கருணை வடிவம்!
அவனோ… தோழனாய், நண்பனாய், கணவனாய் காக்கும் கவசம்!
இருவரும் சேர்ந்து நடத்தும் இந்த வாழ்க்கைப் பயணம்
காலத்தின் அலைகளில் அழியாத காவியம் ஆகிறது!
உன் அன்பின் வித்தகன்

