இருமனம் இணைந்த இனிய கோலம்
இதில் மூன்றாம் மனிதன் முகம் காட்டுவது ஏனோ?
இருவர் பேசும் இனிய பொழுதில் இடைப்புகும் எவராயினும்
உயிர் மூச்சுக் காற்றில் விரிசல் தரும் ஒட்டுண்ணி!
ஆலோசனை ஊரார்… முடிவு நம்மவர்!
பெற்றவர் சொல்லலாம்… சுற்றத்தார் பகிரலாம்… கேட்பது தப்பில்லை
ஆனால்
முடிவெடுக்கும் கருவறைக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம்!
மறைவு இல்லா மலர்வனம் நம் இல்லறம்!
உலகிற்கு நம்மிடம் ரகசியங்கள் இருக்கலாம்,
நமக்குள்ளே ஒளிவுமறைவு எதற்கு?
உன் இதயம் நான் அறியும் திறந்த புத்தகம்,
என் எண்ணம் நீ வாசிக்கும் தெளிந்த ஓடை!
பழிபோடாப் பயணம் நம்முடையது!
வெற்றி வந்தால் தழுவுவோம், தோல்வி வந்தால் தாங்குவோம்! “
அன்றே சொன்னேன்” என்ற வார்த்தையை எரிப்போம்,
“நாமே செய்தோம்” என்ற பாரத்தைச் சுமப்போம்!
துணையை நிந்திக்காத நேசமே நம் பலம்!
ஐம்பது பிளஸ் ஐம்பது – இது நூறு!
காதல் பாதி… காமம் பாதி… அதிகாரம் பாதி… அன்பு பாதி… சமபங்கு உரிமையில் சரிபாதி வாழ்வு! கணக்கல்ல இது… நூறு சதவீத வாழ்க்கை!
– உன் அன்பின் வித்தகன்

