காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!
“உன் பெயரை என் உடலில் பச்சை குத்திக் கொள்ள – என் உடல் ஒன்றும் ‘பட்டா’ போட்ட இடமும் அல்ல;
நீ எனக்குத்தான் சொந்தம் என்று முத்திரை குத்த – காதல் ஒன்றும் ‘சொத்துப் பத்திரமும்’ அல்ல!”
பச்சை குத்தும் அந்தச் சில நிமிட வலியைத் தாங்குவது காதலல்ல…
உடல் சோர்வு, உள்ளச் சோர்வு, நோயுற்ற நொடிகள் என வாழ்க்கை உன்னை முடக்கிப் போடும்போது,
உன் கரம் பிடித்து… உன்னைத் தட்டி எழுப்பி… வெற்றி மேடையில் உன்னை ஏற்றி அழகு பார்ப்பதே காதல்!
மேடை ஏறி நின்ற பின் – ‘என் வெற்றிக்கு இவளே காரணம்’ என்று நீ சொல்லும்போது,
‘நான் ஒரு சிறு துளிதான், உழைப்பு எல்லாம் அவரோடது’ என – தன்னடக்கத்தோடு
உன்னைப் பெருமைப்படுத்துவாளே… அங்கேதான் காதல் ‘காவியமாகி’ நிலைத்து நிற்கிறது!
காதல் என்பது ‘தற்காலிக’ காயம் அல்ல;
அது ‘நிரந்தரமான’ தடம்!
-காதலின் வித்தகன்

