அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்!

Spread the love
அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்!

அவள் பாதங்கள் பதியும் நிலத்தின் கடினத்தை

 என் விரல் ரேகைகள் தேய்த்து மென்மையாக்கும்!

அவள் புருவம் சுருங்கும் ஒற்றை நொடியில் காரணங்களை 

என் பிடிவாதம் தேடி வேரறுக்கும்!

அவளை நெருங்கும் வலியின் சிறு அணுக்களைக் கூட

 என் மார்புக்கூடு சல்லடையாய்த் தடுத்து நிறுத்தும்!

உவர்ப்புச் சுவையுள்ள கண்ணீரை அவள் கண்கள் ஒருபோதும் அறியாது,

என் இதழ்களின் தீராத ஆக்கிரமிப்பால் மட்டுமே அங்கு ஈரம் தங்கும்!

அந்தத் தடையற்ற முத்தங்களின் அடைமழையால்…

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்!

                                                                                                                                                                                                                                                                                                                  ✍️உன் பாதுகாப்பின் வித்தகன் 

Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *