Loading read count...

விதைகள் விளைநிலத்தை நோக்கி கருத்துக்கள் களத்தை நோக்கி

விதைகள் விளைநிலத்தை நோக்கி கருத்துக்கள் களத்தை நோக்கி
முடிவில்லாத பிரம்மாண்டமே...
உன்னைப் பார்க்கும் போது புரிகிறது,
வாழ்க்கையும் உன்னைப் போலத்தான் ஒரு நீண்ட பயணம் என்று!
காற்று உரசும் போது உன்னுள்,
அலைகள் எழும்புவது எவ்வளவு எதார்த்தமோ…
கண்கள் உரசும் போது மனதிற்குள்,
சலனங்கள் எழுவதும் அவ்வளவு எதார்த்தமே!
ஆனால்…
எத்தனை அலைகள் ஆவேசமாய் எழுந்தாலும்,
நீ உந்தன் கரையைத் தாண்டி வருவதில்லை!
எத்தனை ஆசைகள் நெஞ்சுக்குள் துடித்தாலும்,
நான் எந்தன் அறத்தின் எல்லையைத் தாண்டுவதில்லை!
அலைகளைத் தடுத்து நிறுத்துவது உனக்கு அழகு…
ஆசைகளைத் தடுத்து நிறுத்துவது மனிதனுக்கு அழகு!
கடலே… உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை,
மேலே சலனங்கள் இருந்தாலும்…
நம் ஆழத்தில் என்றும் அமைதிதான்!