வெள்ளந்திச் சிரிப்பு!

Spread the love
 
வெள்ளந்திச் சிரிப்பு!

 

ஒப்பனைகள் ஏதுமின்றி

ஒற்றைப் பொட்டில் நின்றவளே!

உன் ஜிமிக்கி அசையும் அழகில்தான்

என் கவிதைகள் சிதறியதோ!

பிளாஸ்டிக் சிரிப்புகள் மலிந்த ஊரில்

உன் இதழ்களில் மட்டும்… எப்படி ஒட்டிக்கொண்டது

இந்தக் கிராமத்து ‘வெள்ளந்திச் சிரிப்பு’?

முதல் மழை விழுந்த கரிசல் மண்ணாய்

உன் சிரிப்பில் வீசுதடி நம்ம ஊரு வாசம்!

கம்மாய்க்கரைக் காற்றில் பூத்த

பருத்திப் பூவாய் விரியுது உன் முகம்

நாகரிகம் பூசிய நகரத்து வீதிகளில்

இந்த கரிசக்காட்டு எதார்த்தத்தை நான் எங்கே தேடுவேன்?

பார்த்த மாத்திரத்தில் பற்றிக்கொள்ளும் பச்சையான ஈர்ப்பு இது!

காய்ச்சிய வெல்லத்தின் இனிப்பாய்…

எந்தப் பேனாவும் எழுதிடாத அழகு இது!

வார்த்தைகளைத் திருடிவிட்டாய்…

என் வரிகளை ஈர்த்துவிட்டாய்…

உன் ஒருக்களித்தப் பார்வையில் –

அந்த ‘வெள்ளந்திச் சிரிப்பில்’ என் வித்தகத்தையும் கட்டிப்போட்டுவிட்டாய்!

                                                                                                       -எதார்த்தத்தைத் தேடும்… வித்தகன்

 

Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *