July 2026

நுரையும் நங்கூரமும்!

நுரையும் நங்கூரமும்! எல்லோரும் காதலைக் கரையில் மோதும் அலைகளோடு ஒப்பிடுகிறார்கள்… நான் காதலை நடுக்கடலில் வீசப்பட்ட நங்கூரத்தோடு ஒப்பிடுகிறேன்! அலைகள் கரையைத் தொட்டுவிட்டுப் பின்வாங்கும் தற்காலிகச் சலனங்கள், ஆனால் நங்கூரம்… ஒருமுறை ஆழத்தில் இறங்கிவிட்டால், மேலே நிற்கும்கப்பலே திசைமாற நினைத்தாலும், அதை நகர விடாமல் தடுத்து நிறுத்தும் பிடிவாதம்! எல்லோரும் காதலைக் கடலின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகிறார்கள்… நான் காதலை கடலுக்குள் கரைந்திருக்கும் உப்போடு ஒப்பிடுகிறேன்! பார்வைக்குத் தெரிவதில்லை, கைகளில் அள்ளினால் சிக்குவதில்லை… ஆனால், அந்தப் பெரிய கடலையே […]

நுரையும் நங்கூரமும்! Read More »

கரையைத் தாண்டாத கடல்!

முடிவில்லாத பிரம்மாண்டமே… உன்னைப் பார்க்கும் போது புரிகிறது, வாழ்க்கையும் உன்னைப் போலத்தான் ஒரு நீண்ட பயணம் என்று! காற்று உரசும் போது உன்னுள், அலைகள் எழும்புவது எவ்வளவு எதார்த்தமோ… கண்கள் உரசும் போது மனதிற்குள், சலனங்கள் எழுவதும் அவ்வளவு எதார்த்தமே! ஆனால்… எத்தனை அலைகள் ஆவேசமாய் எழுந்தாலும், நீ உந்தன் கரையைத் தாண்டி வருவதில்லை! எத்தனை ஆசைகள் நெஞ்சுக்குள் துடித்தாலும், நான் எந்தன் அறத்தின் எல்லையைத் தாண்டுவதில்லை! அலைகளைத் தடுத்து நிறுத்துவது உனக்கு அழகு… ஆசைகளைத் தடுத்து

கரையைத் தாண்டாத கடல்! Read More »