June 2026

வித்தகன் சிந்தனை 18 சமூகச் சீர்கேட்டின் விதைகள்

  வித்தகன் சிந்தனை 18 சமூகச் சீர்கேட்டின் விதைகள உள்ளடக்கம் “திருத்தும் முதியவர்களிடம் பொறுமையும் இல்லை, திருந்தும் இளைஞர்களிடம் பொறுப்புணர்வும் இல்லை! அறம் மௌனித்து அநீதி ஊக்கப்படும் போது, ஒரு மாபெரும் சமூகச் சீர்கேட்டிற்கான விதைகள் இங்கே அமைதியாக விதைக்கப்படுகின்றன!” – வித்தகன் இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய பலவீனம் தலைமுறைகளுக்கு இடையே இருக்கும் புரிதல் இன்மையே ஆகும். உடலைத் தாக்கும் நோய்களும் கிருமிகளும் எப்படி உடலை மெல்ல மெல்லப் பலவீனப்படுத்துகிறதோ, அதுபோல முதியவர்களின் பொறுமையின்மையும் இளைஞர்களின் பொறுப்பற்ற […]

வித்தகன் சிந்தனை 18 சமூகச் சீர்கேட்டின் விதைகள் Read More »

வித்தகன் சிந்தனை 17 எழுந்தவுடன் வரும் போலி உறவுகள்

வித்தகன் சிந்தனை 17 எழுந்தவுடன் வரும் போலி உறவுகள் உள்ளடக்கம்                   “விழுந்தபோது வேடிக்கை பார்த்தவன், எழுந்தவுடன் கைகொடுக்க வந்தால்… அவன் விரும்புவது நம் நட்பை அல்ல, நமது வெற்றியை!” – வித்தகன் வாழ்க்கையின் சோதனைக் காலங்களில் நாம் தடுமாறி விழும்போது, ஓடிவந்து தூக்கிவிடாமல் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் சமுதாயத்தில் ஏராளம். ஆனால், அதே மனிதர்கள் நாம் நம் உழைப்பால் போராடி ஜெயித்து எழுந்தவுடன், முதலில் வந்து கைகொடுப்பார்கள். அவர்கள் தேடி வந்தது நம்முடைய

வித்தகன் சிந்தனை 17 எழுந்தவுடன் வரும் போலி உறவுகள் Read More »

துரோகம் செய்யாத தோல்வி!

துரோகம் செய்யாத தோல்வி! உச்சம் தொடும் வெற்றி உனக்கு – ஒருநாள்  எதிரியாய் மாறலாம்! மகுடம் சூட்டும் அந்த மயக்கம் – உந்தன்கண்ணை மறைத்தே கொல்லலாம்! ஆனால்… தோல்வி உனக்குத் துரோகம் செய்யாது! எதிரியாய் நின்று உன்னை வீழ்த்தாது! விழுந்த இடமே உனக்குக் பாடம்… எழுந்து நடப்பதே உனது வேதம்! பூமாலை போடும் கூட்டம் இங்கே – உன்னை போதை ஏற்றிச் சாய்க்கும்! வெற்றி என்னும் போலி வேடம் – உன்னை மெல்ல மெல்ல அழிக்கும்! சுட்டெரிக்கும்

துரோகம் செய்யாத தோல்வி! Read More »

ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை…

  ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை… அம்புவிழும் நெஞ்சுக்குள் ஆசைவார்த்தை உளறலானது! நேருக்கு நேராக நெஞ்சத்து விழிகள் மோத… பார்வைக்குத் தோற்றுப்போய் பாதம் பார்த்தேன் திருடன்போல! நேரினிலோர் பெண்ணைக்கண்டு நேசம் பேசுதல் கடினமடா… காரிகையின் தடையுடைத்தால் காதல் என்றும் இனிமையடா! நடையழகை நெடுந்தூரம் நானுமங்கே பின்தொடர… இடையினிலே “நில்”லென்றே என் நாவும் அவசரப்பட… திரும்பிநின்ற திருமகளின் திசைபறந்த கார்கூந்தல், அரும்பயத்தைத் தந்திடும் அய்யனார் அருவாளானது! உதட்டினிலே மூச்சுவிட்டு உறுத்துநின்ற முடிவிலக்க… விதித்ததென்ன? அவ்வுதட்டின் ரேகையென் ஆயுள் ரேகையென!

ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை… Read More »

வித்தகன் சிந்தனை 16 மௌனத்தின் வலிமை

வித்தகன் சிந்தனை 16 மௌனத்தின் வலிமை உள்ளடக்கம் “உன் மௌனம் பலவீனமானது என்று நினைப்பவர்களுக்கு உன் மாற்றத்தின் மூலம் பதில் சொல்! கத்தி பேசும் வார்த்தைகளை விட, விலகி நிற்கும் மௌனத்திற்கு வலிமை அதிகம்!” – வித்தகன் பல நேரங்களில் நம்முடைய அமைதியை உலகத்தினர் நம் பலவீனமாகவோ அல்லது பயமாகவோ தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால், தேவையற்ற இடங்களில் கத்திப் பேசுவதோ, வாதாடுவதோ எந்தப் பயனையும் தராது. சத்தமிடும் வார்த்தைகளை விட, வஞ்சகமான மனிதர்களிடமிருந்து விலகி நின்று

வித்தகன் சிந்தனை 16 மௌனத்தின் வலிமை Read More »

வித்தகன் சிந்தனை 15   புலன நிலைப்பதிவு (WhatsApp Status) குறித்த சிந்தனை

வித்தகன் சிந்தனை 15   புலன நிலைப்பதிவு (WhatsApp Status) குறித்த சிந்தனை உள்ளடக்கம் “தன் பிழையைச் சரிசெய்யத் துணிவில்லாதவர்கள், குற்ற உணர்வை மறைக்க மௌனத்தையோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலைப்பதிவுகளையோ கேடயமாக்கிக் கொள்கிறார்கள்! அடுத்தவரை மறைமுகமாகக் குற்றவாளியாக்குவதன் மூலம் அவர்கள் தற்காலிகமாக மட்டுமே தப்பிக்க முடியும்!”                                              

வித்தகன் சிந்தனை 15   புலன நிலைப்பதிவு (WhatsApp Status) குறித்த சிந்தனை Read More »