துரோகம் செய்யாத தோல்வி!

Spread the love

துரோகம் செய்யாத தோல்வி!

உச்சம் தொடும் வெற்றி உனக்கு – ஒருநாள்  எதிரியாய் மாறலாம்!

மகுடம் சூட்டும் அந்த மயக்கம் – உந்தன்கண்ணை மறைத்தே கொல்லலாம்!

ஆனால்…

தோல்வி உனக்குத் துரோகம் செய்யாது!

எதிரியாய் நின்று உன்னை வீழ்த்தாது!

விழுந்த இடமே உனக்குக் பாடம்…

எழுந்து நடப்பதே உனது வேதம்!

பூமாலை போடும் கூட்டம் இங்கே – உன்னை போதை ஏற்றிச் சாய்க்கும்!

வெற்றி என்னும் போலி வேடம் – உன்னை மெல்ல மெல்ல அழிக்கும்!

சுட்டெரிக்கும் தோல்வித் தழும்புகள் – உன்னை வைரம் போலச் செதுக்கும்!

விட்டுப் போகாத அந்த அனுபவம் – உந்தன் நிழலைப் போலக் காக்கும்!

எதிரி என்பவன் வெளியில் இல்லை – உந்தன் தலைக்கனத்தில் ஒளிவான்!

துரோகி என்பவன் வெற்றியின் நிழலில் – உன்னை தள்ளி விடவே துணிவான்!

தோற்றுப் போனவன் மடையன் அல்ல – அவன் தூங்கிக் கிடக்கும் சிங்கம்!

தோல்வி என்பது துரோகம் அல்ல – அது  துணிவைத் தரும் தங்கம்!

———————-

எழுத்தில் உளி கொண்டு செதுக்கியது… துணிவின் தங்கம் – வித்தகன்

 
Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *