பால்கனியும் கம்மாய்க்கரையும்!

Spread the love

பால்கனியும் கம்மாய்க்கரையும்!

கான்கிரீட் சுவர்களுக்கு நடுவே நீ சிறைபிடித்து வைத்திருக்கும் ஒரு துளி ஆகாயம்தான்…

உன் வீட்டுப் பால்கனி! 

அதில் நீ தேடும் அந்தச் சிறு அமைதியைப் பார்த்து எனக்குள் மெலிதாய்ச் சிரிக்கிறேன்.

நகரத்தின் இரைச்சலில் நீ அடைபட்டுப் கிடக்கிறாய்… வா என் தேவதையே!

என் கிராமத்துச் சாலைகளுக்கு உன்னை அழைத்துச் செல்கிறேன். அங்கே உனக்காகப் பால்கனிகள் இல்லை,

ஆனால், பச்சையம் படிந்த கம்மாய்க்கரைகள் உண்டு!

செயற்கைக் காற்றை சுவாசிக்கும் உனக்கு,

என் ஊர்க் கரிசக்காட்டு வாசம் கலந்த தென்றலின் ஸ்பரிசத்தைக் காட்டுகிறேன்.

சுவர்களைப் பார்த்துப் பழகிய உன் கண்களுக்கு, எல்லையே இல்லாத திறந்த வெளியைப் பரிசளிக்கிறேன்.

பிளாஸ்டிக் விளக்குகள் இல்லாத அடர்ந்த இருட்டில், நிலா வெளிச்சம் உன் முகத்தில் பட்டுத் தெறிக்கும்

அந்த நிஜமான அழகை நான் ரசிக்க வேண்டும்.

இந்த நகரத்தின் நாற்காலியில் நீ தேடும் அந்த ஒரு துளி அமைதி,

என் கிராமத்து வீட்டு வாசலில் உனக்காகவே கொட்டிக் கிடக்கிறது.

உன் பால்கனி கொடுப்பது வெறும் தற்காலிக அமைதி…

என் ஊரும், இந்த உன்னவனும் உனக்குத் தரப்போவது உன் ஆயுளுக்கான நிரந்தர நிம்மதி!

                                                                                                                                                                       -vithakan

 

Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *