ஒரு நிமிடம் பார்த்து ஆயிரம் முறை ரசிப்பவன்!

Spread the love
ஒரு நிமிடம் பார்த்து ஆயிரம் முறை ரசிப்பவன்!
உன்னைப் பார்க்க ஆயிரம் கண்கள் போதாது என்றும்…

என் இரண்டு கண்களும் போதாது என்றும்…

பொய்யில் மொழுகிப் பொட்டு வைப்பவன் நானல்ல!

மெய்யால் எழுதி…

உன்னை மனதால் ரசிப்பவன் நான்!

நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்,

என் கண்களுக்கு லேசாகத் தெரிந்தாலே போதுமடி…

என் மனம் முழுதாய் சந்தோஷத்தில் நிறைந்துவிடும்!

பசியோடு காத்திருக்கும் என் கண்களுக்கு,

உன் ஒரு நொடிப் பார்வையே பெருவிருந்து!

என் கண்கள் உன்னைத் தேடித் தவிக்கும் அந்தப் பசியில்தான்…

உன்னைப் பார்த்த அந்த முதல் நொடியிலேயே,

கண்ணிமைக்கும் நேரத்தில் கவ்விப் படம்பிடித்து…

என் மனதுக்குள் இருக்கும் நினைவடுக்கில்

அழியாப் பதிவுகளாய் உன்னைச் சேமித்துவிடுகிறேன்!

ஆயிரம் முறை பார்த்து ஒரு நிமிடம் ரசிப்பவர்கள் போல் நானல்ல…

நான், ஒரு நிமிடம் பார்த்து ஆயிரம் முறை ரசிப்பவன்!

எப்போதெல்லாம் என் கண்கள் உன்னைத் தேடுகிறதோ…

அப்போதெல்லாம் என் மனம் அந்த நினைவடுக்கினைத் திறந்து பார்த்து ரசிக்கும்!

ஏனென்றால்…

நான் வார்த்தைகளைச் செதுக்கும் வெறும் கவிஞன் அல்ல,

உன்னை நேசிக்க… உன்னை ரசிக்க வந்த…உன் காதல் கவிஞன்!

                                                                         —உன் காதல் கவிஞன்! vithakan

Did you find this post helpful?
 0 0
50%
50%
Loading read count...
Share this post:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *