துரோகம் செய்யாத தோல்வி!
உச்சம் தொடும் வெற்றி உனக்கு – ஒருநாள் எதிரியாய் மாறலாம்!
மகுடம் சூட்டும் அந்த மயக்கம் – உந்தன்கண்ணை மறைத்தே கொல்லலாம்!
ஆனால்…
தோல்வி உனக்குத் துரோகம் செய்யாது!
எதிரியாய் நின்று உன்னை வீழ்த்தாது!
விழுந்த இடமே உனக்குக் பாடம்…
எழுந்து நடப்பதே உனது வேதம்!
பூமாலை போடும் கூட்டம் இங்கே – உன்னை போதை ஏற்றிச் சாய்க்கும்!
வெற்றி என்னும் போலி வேடம் – உன்னை மெல்ல மெல்ல அழிக்கும்!
சுட்டெரிக்கும் தோல்வித் தழும்புகள் – உன்னை வைரம் போலச் செதுக்கும்!
விட்டுப் போகாத அந்த அனுபவம் – உந்தன் நிழலைப் போலக் காக்கும்!
எதிரி என்பவன் வெளியில் இல்லை – உந்தன் தலைக்கனத்தில் ஒளிவான்!
துரோகி என்பவன் வெற்றியின் நிழலில் – உன்னை தள்ளி விடவே துணிவான்!
தோற்றுப் போனவன் மடையன் அல்ல – அவன் தூங்கிக் கிடக்கும் சிங்கம்!
தோல்வி என்பது துரோகம் அல்ல – அது துணிவைத் தரும் தங்கம்!
———————-
எழுத்தில் உளி கொண்டு செதுக்கியது… துணிவின் தங்கம் – வித்தகன்
