Loading read count...


விதைகள் விளைநிலத்தை நோக்கி கருத்துக்கள் களத்தை நோக்கி

விதைகள் விளைநிலத்தை நோக்கி கருத்துக்கள் களத்தை நோக்கி

பழைய வரிகளைக் கடன் வாங்கி
என் பிரபஞ்சத்தை நான் சுருக்க விரும்பவில்லை…
இதோ, என் உணர்வுகளில் உதித்த புதிய வரிகள்!
“உயிரைப் பிழிந்து உருக்கொடுக்கும் தாயினும் சிறந்த விந்தையில்லை!”
அவள், என் வலிகளைத் தன் நரம்புகளில் உணரும் விசித்திர ஜீவன்!
உலகம் என் தோல்விகளைப் பட்டியலிட்டுத் தள்ளும்போதும்,
என் ஒற்றைப் புன்னகையை மட்டுமே கொண்டாடும் பேரன்பு.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்காக மட்டுமே துடிக்கும், என்
வாழ்வின் ஆதி முதல் அந்தம் வரையிலான ஆகப்பெரிய சுவாசம் அவள்!
“வியர்வையை உருக்கி வழிகாட்டும் தந்தையினும் உயர்ந்த வேதமில்லை!”
அவர், உதடுகளால் அன்பைச் சொல்லத் தெரியாத ஆழமான மௌனப் புத்தகம்!
என் இருண்ட பயணங்களில்
எக்காலமும் எனக்குத் துணையாக வந்து,
என்னைத் தடம் மாறாமல் காத்து நிற்கும் தங்க வேல் அவர்!
தன் தேய்ந்த காலணிகளைப் பொருட்படுத்தாமல், என்
எதிர்காலத்திற்குப் பூ விரிக்கத் துடிக்கும் தியாகம்.
புராணங்கள் சொல்லும் தேவதைகளை நான் நேரில் கண்டதில்லை,
ஆனால்… என் வாழ்வென்னும் ரயிலை நேர்பாதையில் செலுத்தும்,
இந்த இரண்டு நிஜத் தெய்வங்களை… என் ஆயுள் உள்ளவரை என்
நெஞ்சச் சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்ப்பேன்!
-வியர்வைச் சொந்தங்களின் வித்தகன்