வித்தகன் கவிதை

துரோகம் செய்யாத தோல்வி!

துரோகம் செய்யாத தோல்வி! உச்சம் தொடும் வெற்றி உனக்கு – ஒருநாள்  எதிரியாய் மாறலாம்! மகுடம் சூட்டும் அந்த மயக்கம் – உந்தன்கண்ணை மறைத்தே கொல்லலாம்! ஆனால்… தோல்வி உனக்குத் துரோகம் செய்யாது! எதிரியாய் நின்று உன்னை வீழ்த்தாது! விழுந்த இடமே உனக்குக் பாடம்… எழுந்து நடப்பதே உனது வேதம்! பூமாலை போடும் கூட்டம் இங்கே – உன்னை போதை ஏற்றிச் சாய்க்கும்! வெற்றி என்னும் போலி வேடம் – உன்னை மெல்ல மெல்ல அழிக்கும்! சுட்டெரிக்கும் […]

துரோகம் செய்யாத தோல்வி! Read More »

ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை…

  ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை… அம்புவிழும் நெஞ்சுக்குள் ஆசைவார்த்தை உளறலானது! நேருக்கு நேராக நெஞ்சத்து விழிகள் மோத… பார்வைக்குத் தோற்றுப்போய் பாதம் பார்த்தேன் திருடன்போல! நேரினிலோர் பெண்ணைக்கண்டு நேசம் பேசுதல் கடினமடா… காரிகையின் தடையுடைத்தால் காதல் என்றும் இனிமையடா! நடையழகை நெடுந்தூரம் நானுமங்கே பின்தொடர… இடையினிலே “நில்”லென்றே என் நாவும் அவசரப்பட… திரும்பிநின்ற திருமகளின் திசைபறந்த கார்கூந்தல், அரும்பயத்தைத் தந்திடும் அய்யனார் அருவாளானது! உதட்டினிலே மூச்சுவிட்டு உறுத்துநின்ற முடிவிலக்க… விதித்ததென்ன? அவ்வுதட்டின் ரேகையென் ஆயுள் ரேகையென!

ஐம்புலனும் பார்க்கின்றேன் ஐம்பொன் சிலையவளை… Read More »

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்!

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்! அவள் பாதங்கள் பதியும் நிலத்தின் கடினத்தை  என் விரல் ரேகைகள் தேய்த்து மென்மையாக்கும்! அவள் புருவம் சுருங்கும் ஒற்றை நொடியில் காரணங்களை  என் பிடிவாதம் தேடி வேரறுக்கும்! அவளை நெருங்கும் வலியின் சிறு அணுக்களைக் கூட  என் மார்புக்கூடு சல்லடையாய்த் தடுத்து நிறுத்தும்! உவர்ப்புச் சுவையுள்ள கண்ணீரை அவள் கண்கள் ஒருபோதும் அறியாது, என் இதழ்களின் தீராத ஆக்கிரமிப்பால் மட்டுமே அங்கு ஈரம் தங்கும்! அந்தத் தடையற்ற முத்தங்களின்

அவள் கன்னங்கள் காயாது நான் இருக்கும் வரையில்! Read More »

ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும்

ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும் அழுகையில் பிறந்து, பின் புன்னகையில் மலர்ந்து, மல்லாந்து கிடந்து, தன் கைகால்களை அசைத்து, தானாகவே புரண்டு, மெல்லத் தவழத் தொடங்கி, சுவர் பிடித்து எழுந்து, தத்தித் தத்தி நடந்து… ஒவ்வொரு அடியும் இயற்கையின் உந்துதல்! யாரும் கற்பிக்காமல் கற்ற ஆயிரம் சிறு வெற்றிகள்! விழுந்து, முட்டி மோதி, மீண்டும் தாமாகவே எழுந்து, தன்னம்பிக்கையைத் தானே சுவைக்கும் அற்புதப் பயணம். உணவூட்டி, வெறும் பாதுகாப்பை மட்டுமே வழங்கிவிட்டு, “நானே வளர்த்தேன்” என மார்தட்டும்

ஆயிரம் வெற்றிகளும் ஒற்றை எதிர்பார்ப்பும் Read More »

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு!   “உன் பெயரை என் உடலில் பச்சை குத்திக் கொள்ள – என் உடல் ஒன்றும் ‘பட்டா’ போட்ட இடமும் அல்ல;  நீ எனக்குத்தான் சொந்தம் என்று முத்திரை குத்த – காதல் ஒன்றும் ‘சொத்துப் பத்திரமும்’ அல்ல!” பச்சை குத்தும் அந்தச் சில நிமிட வலியைத் தாங்குவது காதலல்ல… உடல் சோர்வு, உள்ளச் சோர்வு, நோயுற்ற நொடிகள் என வாழ்க்கை உன்னை முடக்கிப் போடும்போது,  உன் கரம் பிடித்து… உன்னைத்

காதல்: பட்டா அல்ல… பற்றுக்கோடு! Read More »

காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்

கனிந்த கனி

கனிந்த கனி காலையில் விடைபெற்று மாலையில் வருகிறாய்களைப்பின் கனத்தால் மௌனமாய் அமர்கிறாய்“சாப்பிட்டாயா?” “தூங்கலாமா?”இந்த நான்கு சொல்லின் சிறைக்குள்நம் காதலை அடைக்கிறாய்! ஆயிரம் சொல் அள்ளித் தரும் அகராதிஉன் உள்ளத்தில் இருக்கஆருயிர் மனைவியோடு பேசஒரு சொல் கூட இல்லையா? நீ மட்டும் தான் உழைக்கிறாயா அன்பே…நானும் வீட்டினுள் மெழுகாய் தேய்கிறேன்! விலையுயர்ந்த பரிசுகள் கேட்கவில்லைஎதிர்பாரா கணத்தில் தரும் முத்தம் தேடுகிறேன்!சமையலறை வியர்வையில் நான் நினைக்கும்போதுபின்னால் இருந்து செய்யும் சிறு சீண்டல் எதிர்பார்க்கிறேன்! காமமும் காதலும் கலந்த தீண்டலில்என் நாணத்தின்

கனிந்த கனி Read More »

நிரந்தரக் குடியேற்றம்

 நிரந்தரக் குடியேற்றம்

நிரந்தரக் குடியேற்றம் கெஞ்சலில் தொடங்கி… மிஞ்சலில் நிறைந்து…கொஞ்சலில் கனிந்து… ஊடலில் உறைந்து…கூடலில் கலந்து நதியாய்ப் பாய்ந்து,நெஞ்சம் எனும் ஆழிகளில் நித்தம் கலக்கும் காதல்! அது நெஞ்சக்கடலைத் தாண்டியும் சென்றுதஞ்சம் புகுந்திடும் உயிரின் பந்தம்!தற்காலிகத் தங்கும் இடம் அல்ல அது – ஓர்நிரந்தரக் குடியேற்றம்! அன்பும் அதிகாரமும் சரிபாதி கலந்த‘மனைவி’ எனும் அழகிய உறவு அது…காலங்கள் கடந்து கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும்,காதல் கொண்ட அவன் நெஞ்சில் சுருக்கங்கள் விழுவதில்லை! அவளோ… அன்பின் கருணை வடிவம்!அவனோ… தோழனாய், நண்பனாய், கணவனாய்

 நிரந்தரக் குடியேற்றம் Read More »

நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖

இருமனம் இணைந்த இனிய கோலம் இதில் மூன்றாம் மனிதன் முகம் காட்டுவது ஏனோ? இருவர் பேசும் இனிய பொழுதில் இடைப்புகும் எவராயினும்  உயிர் மூச்சுக் காற்றில் விரிசல் தரும் ஒட்டுண்ணி! ஆலோசனை ஊரார்… முடிவு நம்மவர்! பெற்றவர் சொல்லலாம்… சுற்றத்தார் பகிரலாம்… கேட்பது தப்பில்லை  ஆனால் முடிவெடுக்கும் கருவறைக்குள் நீயும் நானும் மட்டுமே இருப்போம்! மறைவு இல்லா மலர்வனம் நம் இல்லறம்!  உலகிற்கு நம்மிடம் ரகசியங்கள் இருக்கலாம்,  நமக்குள்ளே ஒளிவுமறைவு எதற்கு?  உன் இதயம் நான் அறியும்

நூறு சதவீத வாழ்வு: இருமனப் பந்தம் 💖 Read More »

மழலை மாறா மணவாழ்க்கை

மழலை மாறா மணவாழ்க்கை மழலை மாறா மணவாழ்க்கையில்,கணவன்-மனைவி எனும் உறவில்கௌரவம் துறந்து குழந்தையாவோம்!ஓடி ஆடிப் பாடி மகிழ்ந்துஉள்ளம் திறந்தே விளையாடுவோம்! முத்தம் சிந்தத் தோன்றுகிறதா?மெல்ல  மெய்மறந்துஅணைக்கத் துடிக்கிறதா?தடையின்றிச் செய்திடு அக்கணமே —அந்தத் தருணமே வாழ்வின் வரமே! வார்த்தைகள் தீர்ந்த போதெல்லாம்வாடி வருந்தி மௌனம் காக்காதே!பகலில் நடந்த கதைகளையெல்லாம்ஓர் பாசக்கவிதையாய் வாசித்திடு! அவள் பேசிய அரைமணி நேரமும் உந்தன் அன்பைச் செவியால் ஊற்றிடு!பேசப் பேசத் தடைகள் உடையும்,பேரின்பக் கதவுகள் மெல்லத் திறக்கும்! பொருட்கள் உடைந்தால் குழந்தையிரண்டுஅங்கே போரிட்டுப் பிரிந்து நிற்பதில்லை;வெறும்

மழலை மாறா மணவாழ்க்கை Read More »

சுமையும் சுகமே… அவள் புன்னகையில்!

சுமையும் சுகமே… அவள் புன்னகையில்!   தாய்வீட்டுச் சுதந்திரம் இங்கே கனவு…இது கடமைகள் ஆளும் புகுந்த வீடு! காலை ஒன்பது மணி என்பது சோம்பல் அல்ல— இரவெல்லாம் விழித்திருந்த என் தாய்மைக்கு, இந்த உலகம் தரும் சிறு சலுகை! விடியல் எனக்கில்லை, என் வேலைகளுக்கே… மொட்டை மாடி வெயிலின் ஈரம் காயும் முன், என் குளியல் ஈரம் காயும் முன்னே— சிணுங்கி அழும் என் சிறு தேவதை, என் நேரத்தை மொத்தமாய் குத்தகை எடுக்கிறாள்! சமையல் மட்டுமே

சுமையும் சுகமே… அவள் புன்னகையில்! Read More »